தினமும் நாம் காலையில் எழுந்து அன்றாட வேளைகளில் மூழ்கி மீண்டும் உறங்கும் முன்பு என்றாவது நினைத்துப் பார்த்திருப்போம், நாம் வாழ்வதன் அர்த்தம் என்ன என்று. ஆனால் அதை அன்றைய உறக்கத்தோடு மறந்துவிட்டு மீண்டும் அடுத்த நாள் வேலைகளை செய்யத் தொடங்கிவிடுவோம். இப்படி உழைத்து உழைத்து நாம் என்ன சாதித்தோம்?
4 வயதில் LKG சேர்ந்து, 6 வயதில் முதல் வகுப்பில் ஆரம்பிக்கிறது நம் உழைப்பு. 22 /23 வயதில் தட்டுத் தடுமாறி ஒரு டிகிரி முடித்து விட்டு வேளையில் அமர்ந்தால், அவ்வளவுதான் வாழ்க்கை. 58 வயது வரை ஓடோடி விடுகிறது. இதற்கிடையில், ஆயிரம் சந்தோசங்கள், பிரச்சனைகள், நண்பர்கள், எதிரிகள், உறவுகள் வந்து போகின்றன. கடைசியில் நாம் கொண்டு செல்ல போவதுதான் என்ன? இந்த சந்தோசங்கள், பிரச்சனைகள், நண்பர்கள், எதிரிகள், உறவுகளையா? இல்லவே இல்லை.
இந்த உண்மையை நாம் உணரும் வயதில், வாழ்க்கையில் 75% வாழ்வை முடித்திருப்போம். மீதி 25% வாழ்க்கையை இதை நினைத்தே ஓட்டிவிடுவோம். இதற்க்கான தீர்வுதான் என்ன? நடுத்தர மக்கள் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது. இந்த இயந்திர வாழ்க்கை வாழ்ந்து முடிப்பதற்குப் பெயர்தான் நிம்மதியான வாழ்க்கையா?
வாழ்க்கையின் முதல் பாதியை பெற்றோருக்காகவும், அடுத்த பாதியை குழந்தைகளுக்காகவும் வாழும் நாம், எப்போது நமக்காக வாழப்போகிறோம்? வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால், நமக்கு கிடைக்கும் ஒரே பதில், "சாவதற்கு முன்பு எதையாது சாதிக்க வேண்டும்".
இதற்கு உதாரணமாக மக்கள் சொல்லும் சில பெயர்கள் சச்சின், ஆபிரகாம் லிங்கன், etc. நமக்கு மிகவும் தெரிந்த நபர்கள் ரஜினி, AR.ரகுமான். இவர்கள் சாதித்தது என்று நாம் எதை நினைக்கிறோம்? இவர்களைப்பற்றி நம்மை சுற்றி இருபவர்களுக்கும் தெரிந்து இருப்பதையா? இல்லை, இவர்களை பற்றி பேசினால் அனைவரும் நம்மை பெருமையாக நினப்பதையா? இல்லை, ஆயிரம் வருடங்கள் கழித்து இவர்களை பற்றி புத்தகங்களில் படிக்க முடியும் என்பதையா? ஒன்றை மட்டும் நாம் நினைவுகூர வேண்டும். நாம் இவர்களை பற்றி பேசுவதாலோ, இல்லை இவர்களோட வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்து வைத்திருப்பதாலோ இவர்களுக்கு என்ன பயன்?
உலகம் எவ்வளவோ முன்னேறினாலும், நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை சராசரியாக வெறும் 3350 வாரங்களே!!! இதில் நாம் எந்த வாரத்தில் இருகிறோம் என்பதை உணர்ந்து சிந்தியுங்கள். வாழ்கையை நமக்காக வாழ ஆரம்பிப்போம். வாழ்த்துக்கள்.
சாதிப்பது என்றால் என்ன? அடுத்த blog -ல் பார்போம். அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

kalakkal sinthanai
ReplyDeleteAyya, inna solla varra? mercila keethupa.. nextula understand aagura mathiri poduppa... :) :P
ReplyDelete@Feroz, mikka nandri :)
ReplyDelete@Geerthi, Machi, poha poha purinchukava da :)
nalla irukku...
ReplyDelete@Naars, Mikka nandri :)
ReplyDeleteஇன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
ReplyDeleteவாழ்வு குறித்த தங்கள் உரத்த சிந்தனைகளைப்
படித்து மகிழ்ந்தேன்
நல்ல பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@ரமணி - தங்களது கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.
ReplyDeleteதங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDelete