எனது சகோதரனின் உத்வேகவும், நண்பர்களின் கருத்துக்களும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுடைய விமர்சனங்கள் வரவேர்க்கப்படுகின்றன.
இப்போது நாம் பார்க்கப்போவது, சாதிப்பது என்றால் என்ன?
இதை கேட்டதும் பலரின் மனதில் தோன்றும் ஒரே கருத்து, மற்றவர்களினால் ஒரு துறையில் செய்ய முடியாததை செய்து காட்டி அதே துறையில் உள்ளவர்களிடம் பாராட்டு பெறுவது என்று. அப்படி பார்த்தால், திருடர்கள் கூடத்தான் திருட்டுத்தனத்தில் பல புதுமைகளை செய்து அதே துறையில் உள்ள அவர்களின் நண்பர்களிடம் பாராட்டு பெறுகிறார்கள். மற்றவரை ஏமாற்றுவதில் பலரும் பல விதமாக சதிப்பவர்களா?
சரி இதைப்பற்றி நாம் சிந்திப்பதற்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு கதையைப் பார்ப்போம்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கிறார்கள். அதில் முதல் பையன் நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்கிறார். இரண்டாவது பெண்ணும் நன்றாக படித்து நல்ல படியாக குடும்ப வாழ்க்கையை தொடங்குகிறார். மூன்றாவது பையனுக்கு சிறு வயதில் படிப்பில் நாட்டம் இல்லை. இதனை நினைத்து பெற்றோர்களும், அவன் கூடப்பிறந்தவர்களும் மிகவும் வருந்துகின்றனர்.
பெற்றோர்கள் எவ்வளவோ கூறியும் அந்த பையன் பள்ளிக்கூடம் செல்லவே மறுக்கிறான். அதனான் அவன் வாழ்க்கை வீணாகி விடக்குடாதென்று நினைத்த பெற்றோர்கள், அவனை அடித்து பள்ளிக்கு அனுப்புகின்றனர். இருந்தாலும் அவனுக்கு படிக்க விருப்பம் இல்லாததால் குறைந்த மதிப்பெண் மட்டுமே வாங்குகிறான். அதே பள்ளியில் படித்த அவனது அண்ணாவும், அக்காளும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள். இதனால் அந்த பள்ளியில் இருந்த ஆசிரியர்களும் அவனை திருத்த பல முயற்சி செய்தும் ஒன்றும் பலிக்க வில்லை. பெற்றோர் எவ்வளவோ அறிவுரை கூறியும் படிக்க விரும்பவில்லை அந்த பையன். அவனுடைய சகோதரன் பலமுறை கூறிய அறிவுரையும் அவனுக்கு உரைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு வழியாக அவன் 10 -ம் வகுப்பு முடித்து விடுகிறான்.
இதே நிலையில் அவன் 12 -ம் வகுப்பும் முடித்து விட்டு எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் இருக்கையில், அவனுடைய தந்தை அவனை ஒரு தொழில்கல்வி கல்லூரியில் சேர்க்கிறார். அங்கும் ஏதோ சென்றோம் வந்தோம் என்று அந்த பையன் இருக்கிறான். ஒருநாள் வகுப்பில் அவனுடைய ஆசிரியர் அவனுக்கு குடுத்த எதிர்பாராத ஊக்கம், அவனுடைய வாழ்வையே மாற்றிவிடுகிறது. அன்றில் இருந்து நன்றாக படித்து தொளில்நுட்பப் படிப்பில் மாநிலத்திலேயே சிறந்த முதல் பத்து மாணவர்களில் ஒருவனாக வந்து ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து, நன்றாக படித்து நல்ல கம்பெனில் சேர்ந்து சமுதாயத்தில் நல்ல படியாக வாழ்க்கையைத் தொடங்குகிறான்.
இந்த கதையில் யாரை சாதனையாளர் என்று நாம் கூற முடியும்?
படிப்பில் நாட்டம் இல்லாத பையன் படிப்பான் என்று அவன்மேல் நம்பிக்கை வைத்து, குறைந்த மதிப்பெண் வாங்கியபோதும், அவனை மேலும் மேலும் படிக்க அனுப்பிய பெற்றோர்களா? என்றாவது நமது அறிவுரையை கேட்டு திரூந்திவிடமட்டானா என்று அந்த பையனுக்கு பல அறிவுரைகள் கூறிய அவனது சகோதரனா? எதிர்பாராத ஊக்கம் கொடுத்த அவனது ஆசிரியரா? எதைபற்றியும் கவலைப்படாமல் தனக்கு தோன்றியதை செய்து முடித்த அந்த பையனா?
இக்கதையின் சாதனையாளர் யார் என்று நம்மால் உணர முடியுமாயின், சாதனை என்றால் என்ன என்று நாம் உணர்திருக்கிறோம் என்று அர்த்தம்.
ரஜினி ஒரு interview-ல் கூறியிருப்பார், இன்று என் படங்கள் நல்ல போகுதுன்னு எல்லாரும் நான் சாதிச்சுட்டேன்னு சொல்றாங்க. அனால், என்னோட அடுத்த சில படங்கள் நல்ல போகலன்னா நான் நடிகனே இல்லன்னு சொல்லிடுவாங்கன்னு. இது தான் உண்மை.
நாம் நம்மை பற்றி என்ன உணர்கிறோம் என்பது மட்டுமே ஒருவனின் சாதனையாக இருக்குமே தவிர, மற்றவர்கள் அவனை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது ஒருபோதும் சாதனையாக இருக்காது. இதை என்று நாம் உணர்கிறோமோ, அன்றிலிருந்து நாமும் ஒரு சாதனையாளர்தான்.
உண்மையை அறிவதற்கான ஒரு வாய்ப்பு!!
Saturday, November 13, 2010
Sunday, November 7, 2010
வாழ்க்கை!!!
தினமும் நாம் காலையில் எழுந்து அன்றாட வேளைகளில் மூழ்கி மீண்டும் உறங்கும் முன்பு என்றாவது நினைத்துப் பார்த்திருப்போம், நாம் வாழ்வதன் அர்த்தம் என்ன என்று. ஆனால் அதை அன்றைய உறக்கத்தோடு மறந்துவிட்டு மீண்டும் அடுத்த நாள் வேலைகளை செய்யத் தொடங்கிவிடுவோம். இப்படி உழைத்து உழைத்து நாம் என்ன சாதித்தோம்?
4 வயதில் LKG சேர்ந்து, 6 வயதில் முதல் வகுப்பில் ஆரம்பிக்கிறது நம் உழைப்பு. 22 /23 வயதில் தட்டுத் தடுமாறி ஒரு டிகிரி முடித்து விட்டு வேளையில் அமர்ந்தால், அவ்வளவுதான் வாழ்க்கை. 58 வயது வரை ஓடோடி விடுகிறது. இதற்கிடையில், ஆயிரம் சந்தோசங்கள், பிரச்சனைகள், நண்பர்கள், எதிரிகள், உறவுகள் வந்து போகின்றன. கடைசியில் நாம் கொண்டு செல்ல போவதுதான் என்ன? இந்த சந்தோசங்கள், பிரச்சனைகள், நண்பர்கள், எதிரிகள், உறவுகளையா? இல்லவே இல்லை.
இந்த உண்மையை நாம் உணரும் வயதில், வாழ்க்கையில் 75% வாழ்வை முடித்திருப்போம். மீதி 25% வாழ்க்கையை இதை நினைத்தே ஓட்டிவிடுவோம். இதற்க்கான தீர்வுதான் என்ன? நடுத்தர மக்கள் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது. இந்த இயந்திர வாழ்க்கை வாழ்ந்து முடிப்பதற்குப் பெயர்தான் நிம்மதியான வாழ்க்கையா?
வாழ்க்கையின் முதல் பாதியை பெற்றோருக்காகவும், அடுத்த பாதியை குழந்தைகளுக்காகவும் வாழும் நாம், எப்போது நமக்காக வாழப்போகிறோம்? வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால், நமக்கு கிடைக்கும் ஒரே பதில், "சாவதற்கு முன்பு எதையாது சாதிக்க வேண்டும்".
இதற்கு உதாரணமாக மக்கள் சொல்லும் சில பெயர்கள் சச்சின், ஆபிரகாம் லிங்கன், etc. நமக்கு மிகவும் தெரிந்த நபர்கள் ரஜினி, AR.ரகுமான். இவர்கள் சாதித்தது என்று நாம் எதை நினைக்கிறோம்? இவர்களைப்பற்றி நம்மை சுற்றி இருபவர்களுக்கும் தெரிந்து இருப்பதையா? இல்லை, இவர்களை பற்றி பேசினால் அனைவரும் நம்மை பெருமையாக நினப்பதையா? இல்லை, ஆயிரம் வருடங்கள் கழித்து இவர்களை பற்றி புத்தகங்களில் படிக்க முடியும் என்பதையா? ஒன்றை மட்டும் நாம் நினைவுகூர வேண்டும். நாம் இவர்களை பற்றி பேசுவதாலோ, இல்லை இவர்களோட வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்து வைத்திருப்பதாலோ இவர்களுக்கு என்ன பயன்?
உலகம் எவ்வளவோ முன்னேறினாலும், நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை சராசரியாக வெறும் 3350 வாரங்களே!!! இதில் நாம் எந்த வாரத்தில் இருகிறோம் என்பதை உணர்ந்து சிந்தியுங்கள். வாழ்கையை நமக்காக வாழ ஆரம்பிப்போம். வாழ்த்துக்கள்.
சாதிப்பது என்றால் என்ன? அடுத்த blog -ல் பார்போம். அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

Subscribe to:
Comments (Atom)